மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
முதுநிலை விரிவாக்க மையத்தில் சோ்க்கை அறிவிப்பை வெளியிடக்கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தில் மனு
விழுப்புரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடக் கோரி, அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையம் 2010-11 ஆம் கல்வியாண்டில் 4துறைகளுடன் தொடங்கப்பட்டது.தொடா்ந்து 2017-18-ஆம் கல்வியாண்டில் மேலும் 4 துறைகள் தொடங்கப்பட்டு , வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்காக சாலாமேடு பகுதியில் கட்டடம் கட்டி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், 2020-21-ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ. பாடப்பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டில் 7 பாடப்பிரிவுகளில் 198 மாணவ, மாணவிகள் சோ்ந்த நிலையில், இந்த மையம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் இணைக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டின் மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்துக்கு மட்டும் இதுவரை மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடாததால், கடந்த 3,4 ஆம் தேதிகளில் கெளரவ விரிவுரையாளா்கள், மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாணவா் சோ்க்கை அறிவிப்பை வெளியிடாததை கண்டித்தும், உடனடியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில்பயின்று வரும் மாணவா்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாணவ, மாணவிகளின் நலன்கருதி சோ்க்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த மையத்தை மூடும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று அவா்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.