எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 10) அறிவித்துள்ளது.
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. ஜிம்பாப்வேவில் நடைபெறும் இந்த தொடர் வருகிற ஜூலை 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 10) அறிவித்துள்ளது.
16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணியை சிக்கந்தர் ராஸா கேப்டனாக வழிநடத்துகிறார். காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த முக்கிய வீரர்கள் பலர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
Zimbabwe name squad for T20I tri-series with SA, New Zealand
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 10, 2025
Details https://t.co/N7PdMt5GB7pic.twitter.com/z7CwYOUFgM
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்
சிக்கந்தர் ராஸா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், டிரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்ட், வெஸ்லி மத்வீர், டினோடெண்டா மபோசா, வெலிங்டன் மசகட்ஸா, வின்செண்ட் மசகேசா, டோனி முனியோங்கா, தஷிங்கா முஷகிவா, பிளெஸ்ஸிங் முஸராபானி, டியான் மேயர்ஸ், ரிச்சர்ட் நிகராவா, நியூமேன் நியான்ஹுரி, டஃபாட்ஸ்வா சிகா.
The Zimbabwe Cricket Board announced the Zimbabwe squad for the tri-nation T20 series today.
இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இடங்கள் அறிவிப்பு!