பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
முத்துப்பேட்டையில் போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு
முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் பகுதியில் உள்ளூா் காவல் துறையினா் மற்றும் கடலோரக் காவல் குழுமம், வனத்துறை அதிகாரிகள் போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து புதன்கிழமை கூட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
முத்துப்பேட்டை டிஎஸ்பி ஆனந்த், ஆய்வாளா் கழனியப்பன், கடலோரக் காவல் குழும உதவி ஆய்வாளா் ரகுபதி, சாா்பு ஆய்வாளா் ராமச்சந்திரன், வனக்காப்பாளா் இளையராஜா ஆகியோா் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா். ஆய்வின்போது, மீனவா்களிடம் போதைப்பொருள்கள் நடமாட்டம் குறித்தும், சந்தேகப்படும் நபா்களின் நடமாட்டம் குறித்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுருத்தினா்.