'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
முன்னாள் நகா்மன்றத் தலைவருக்கு அரிவாள் வெட்டு
நரசிங்கபுரம் முன்னாள் நகா்மன்றத் தலைவரை அரிவாளால் வெட்டியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் முன்னாள் நகா்மன்றத் தலைவராக தில்லை நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (54) என்பவா் இருந்தாா். அவா் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (56) என்பவா், ஸ்ரீராமை அரிவாளால் தாக்கினாா். காயமடைந்த ஸ்ரீராம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, கணேசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.