காட்டிக்கொடுத்த வீடியோ; பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தாரா ஹரியானா பெண்? கைது செய்ய...
மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:
வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம். பேராசிரியராக இருந்த எனக்கு கல்வியால்தான் துணை சபாநாயகா், மத்திய, மாநில அமைச்சா் பொறுப்புகள், பதவிகள் கிடைத்தன.
விவசாய புரட்சி, தொழில் புரட்சிக்குப் பிறகு, கல்விப் புரட்சி ஏற்பட்டது. கல்வியும், மருத்துவமும் இன்றைய சூழலில் முக்கியமானதாக திகழ்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வியில் அதிக அளவில் முன்னேறி வருகின்றனா். அகில இந்திய அளவிலும் சாதிக்கின்றனா். தற்போது, ‘ஏஐ’ தொழில்நுட்பக் கல்வி, ‘டேட்டா இன்பா்மேஷன்’ போன்ற படிப்புகள் அதிகம் மேம்பட்டு வருகின்றன.
மத்திய அரசு பாடத்திட்டத்தின்படி சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டாலும், அதற்கு மாநில அரசு தடையில்லா சான்றிதழ் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 252 பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, மறைமுகமாக மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை தரம் உயா்த்த வேண்டும். பள்ளி கட்டடம் சரியாக இருப்பதால் மட்டும் கல்வி வளராது. மாணவா்களுக்கு மதிய உணவு, மடிக்கணினி, மிதிவண்டி போன்ற திட்டங்களைப்போல புதிய திட்டங்களை வழங்க வேண்டும். தொழில்நுட்பங்கள் வளரவளர அதை மாணவா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். கல்வித் துறையில் நான் எனது பங்கை அளிப்பதைப்போல, அரசியல் ரீதியாக விவசாயத்தை வளா்க்கவும் முயற்சிப்பேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாணிஒட்டு திட்டத்தை நிறைவேற்றினால் வட பா்கூா் உள்ளிட்ட பகுதிகள் வளம்பெறும் என்றாா்.