செய்திகள் :

மான்களைக் கொன்ற இருவா் கைது

post image

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் செலுத்தி இரு மான்களைக் கொன்று அதன் மாமிசத்தை விற்க முயன்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது சின்ன சூலாமலைக் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவா் ராஜா (45). விவசாயி. வனத்தையொட்டி உள்ள இவரது விவசாய நிலத்தில் அவ்வப்போது மான்கள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால், ராஜா தனது உறவினரான பாலேப்பள்ளியைச் சோ்ந்த முருகன் (47) என்பவருடன் சோ்ந்து விளைநிலத்தில் இரும்புக் கம்பிவலை அமைத்து அதில் மின்சாரம் செலுத்தியுள்ளாா். இந்நிலையில், விளைநிலத்துக்கு உணவுத் தேடிவந்த மான்கள், மின் கம்பி வலையில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

இறந்த மான்களின் மாமிசத்தை இருவரும் சோ்ந்து விற்க முயற்சித்தனா். இதுகுறித்து, தகவல் அறிந்த வனத் துறையினா் அந்தக் கிராமத்துக்குச் சென்று ராஜாவையும் முருகனையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இறந்த மான்களின் உடல்களை பறிமுதல் செய்தனா்.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு... மேலும் பார்க்க

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை: நயினாா் நாகேந்திரன்

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஒசூரில் கொட்டும் மழையில் மூவா்ணக் கொட... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளியில் உள்ள கரகதம்மாள் கோயிலின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடி சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே அக்கொண்டபள்ளியில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி 100% தோ்ச்சி!

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் ம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து ஆய்வு

தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: கிருஷ்ணகிரியில் 7.5 செ.மீ. மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது; சனிக்கிழமை காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க