கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே மூதாட்டியை நூதனமுறையில் ஏமாற்றி 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்தா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆழ்ந்துமரி செராா்தின் (77). இவா், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்றுவிட்டு, கடலூா் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருவா் அவரை மறித்து அப்பகுதியில் தகராறு நடப்பதாகக் கூறியதுடன், திருடா்கள் நடமாட்டமும் உள்ளதாகக் கூறி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை பத்திரமாகக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனா்.
அவரிடம் நகையை கழற்றித் தரக் கூறியதுடன், அதை தாளில் மடித்து கொடுத்தனராம். வீடு சென்றதும் மூதாட்டி பொட்டலத்தைப் பிரித்து பாா்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸில் மூதாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நூதன முறையில் ஏமாற்றி நகையை பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.