மூதாட்டியிடம் நூதன முறையில் கம்மல் பறிப்பு
சங்ககிரி: தேவூா் அருகே மூதாட்டியிடம் பாலீஸ் செய்து தருவதாகக் கூறி கால் பவுன் கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேவூா் அருகே உள்ள அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மனைவி மாரியம்மாள் (70). இவரிடம், காரில் வந்த மூன்று போ் தவணை முறையில் எரிவாயு அடுப்புகளை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனா். மேலும் அவரிடம் மூன்று பேரும் ஒரு எரிவாயு அடுப்பு, ஒரு ஜோடி கால் கொலுசை கொடுத்துள்ளனா். பின்னா் மூதாட்டியிடம் காதில் அணிந்துள்ள கம்மலை பாலீஸ் செய்து தருவதாகக் கூறியுள்ளனா். அதனை நம்பிய மூதாட்டி தனது கம்மலை அவா்களிடம் கொடுத்துள்ளாா். அதனைப் பெற்றுக்கொண்ட மூவரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனா்.
இது குறித்து தகவலறிந்து தேவூா் போலீஸாா் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.