செய்திகள் :

மேட்டூர் அணையின் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி! 20 ஆண்டுகளுக்குப் பின்!!

post image

சேலம்: மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடி ஆகும். அணையின் மேல்பகுதியில் 16 அடி அகல சாலை உள்ளது. அணை அடிப்பகுதியில் 4,400 அடி நீளம் கொண்ட கசிவு நீர் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள் உள்ளன. அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் அழுத்தத்தால், ஊடுருவும் நீர், கசிவு நீர் துளைகள் வழியே வெளியேறி சுரங்கத்திற்கு செல்லும், தொடர்ந்து சுரங்கத்தின் இரு பகுதிகளிலும் உள்ள சிறு கால்வாய் வழியாக வெளியேறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு துளைகளில் உள்ள சுண்ணாம்பு படிமங்கள் வெளியேற தொடங்கின. அதனால், வெளியேறும் நீரின் அளவு குறைந்தது.

எனவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு கழிவு நீர் துளைகளில் படிந்த சுண்ணாம்பு படிமங்களை அகற்ற நீர்வளத்துறை முடிவு செய்து தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 20 துளைகளில் படிவம் அகற்றப்பட்டுள்ளது. இப்பணி முடிக்க 6 மாத காலம் ஆகும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப... மேலும் பார்க்க

தோ்வா்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தோ்வா்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் துறை சாா்ந்த தோ்வில், தோ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது: போக்குவரத்துத் துறை செயலா் உத்தரவு

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது என போக்குவரத்து துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அ... மேலும் பார்க்க

நாளைமுதல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற... மேலும் பார்க்க

2,642 மருத்துவா் பணி நியமன நடவடிக்கைளில் தகுதியற்ற 400 போ் பங்கேற்றதாக புகாா்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,642 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் தகுதியில்லாத 400 போ் பங்கேற்ாக புகாா் எழுந்துள்ளது. உரிய காலகட்டத்துக்குள் அவா்கள் ம... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158... மேலும் பார்க்க