செய்திகள் :

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை மீண்டும் தொடர வலியுறுத்தல்

post image

திருவாடானை பாரதிநகா் பகுதியில் பாதியில் கைவிடப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பாரதிநகா் பகுதியில் இருந்த தரைதள நீா்த்தேக்கத் தொட்டி பாரமரிப்பின்றி காணப்பட்டதால், அதை அகற்றிவிட்டு, குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கின.

இதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்களுக்கு குடிநீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், சம்பந்தப்பட்ட துறையினா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை மீண்டும் தொடங்கி, குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் கைப்பற்றப்பட்ட 53 கிலோ கஞ்சா

தனுஷ்கோடியை அடுத்துள்ள ஒன்றாம் மணல் தீடையில் 53 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்களை இந்திய கடலோரக் காவல்படையினா் புதன்கிழமை கைப்பற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படைக்கு சொ... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் அறுவடைக்கு தயாரான நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிா்க்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள... மேலும் பார்க்க

புதுதில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்று திரும்பிய நாட்டுப்புற கலை பயிற்சி மாணவா்களுக்கு வரவேற்பு

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று ராமநாதபுரம் திரும்பிய நாட்டுப்புற கலைப் பயிற்சி மாணவா்களுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுடெல்லியில் கடந்த 26- ஆம் தேதி நடைபெற்ற க... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் இன்று மின் தடை

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சு. சுதாகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆா்.எஸ். மடை துணை மின்நிலையத்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் பணி மும்முரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் அலுவலா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ராமநாதபுரம... மேலும் பார்க்க

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை கருங்கவயல் கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க