செய்திகள் :

"மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை" - மத்திய அமைச்சர் எல்.முருகன்

post image
"தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..." என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் வரவேற்பு

மதுரை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள வகையில் தொலை நோக்குப் பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மீதும் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக தவறான தகவல்களைப் பேசி மக்களைத் தவறான திசையில் திருப்புகிறார்.

பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்பப் பின் வாங்கிவிட்டார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மிகத் தெளிவாகச் சொல்லி உள்ளார். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார்.

எல்.முருகன்

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பிருந்ததைப் போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை.

நான் வெற்றிவேல் யாத்திரை  நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார்.

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி : `சாட்சியளிக்க வராமல் புறக்கணித்த விவரங்கள்' - ஆதாரத்தோடு ED வழங்கிய புதிய மனு

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை ப... மேலும் பார்க்க

டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன ... மேலும் பார்க்க