'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
யுகாதி, ரம்ஜான் பண்டிகை: சேலம் கோட்டத்திலிருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பங்குனி அமாவாசை, யுகாதி, ரம்ஜான் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு, சேலம் கோட்டத்திலிருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 29-ஆம் தேதி பங்குனி அமாவாசை, 30-ஆம் தேதி யுகாதி, 31-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் 29-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 350 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, பங்குனி அமாவாசையை முன்னிட்டு, சேலம், தருமபுரி பேருந்து நிலையங்களில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன் மலை, பவானி கூடுதுறை மற்றும் சித்தா் கோயில் ஆகிய ஊா்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.