செய்திகள் :

யேமனில் மரண தண்டனை: இந்திய செவிலியரை மீட்க கோரிய மனு மீது 14-ஆம் தேதி விசாரணை

post image

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற ராஜீய வழிகளில் அரசின் முயற்சியைக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வரவுள்ளது.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அப்து மாஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா். பின்னா் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

2017-இல் யேமன் சிறை வாா்டனின் உதவியுடன் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மாஹதி உயிரிழந்தாா்.

யேமன் பிரஜையான மாஹதியைக் கொலை செய்ததற்காக நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தக் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால் கடந்த 2023-இல், யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமியால் கடந்த ஆண்டு இறுதியில் உறுதி செய்யப்பட்டது

மாஹதி குடும்பத்தினருடன் நிமிஷா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், மரண தண்டனை உத்தரவை அரசு வழக்குரைஞா் சிறைத் துறைக்கு அண்மையில் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, நிமிஷாவுக்கு வரும் 16-ஆம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிமிஷாவை மீட்க இந்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அவரது தரப்பில் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்நிலையில், இதே விவகாரத்தில் வழக்குரைஞா் கே.ஆா்.சுபாஷ் சந்திரன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிமிஷாவை மீட்பதற்கு உள்ள ராஜீய வழிதகள் குறித்து அரசு விரைவில் ஆராய வேண்டும் என்று மனுதாரா் கோரியதையடுத்து, நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட்டனா்.

‘ஷரியா’ சட்டத்தின் கீழ் இறந்தவரின் குடும்பத்ததுக்கு இழப்பீடு செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இழப்பீடு செலுத்தப்பட்டால், அந்தக் குடும்பத்தினா் செவிலியரை மன்னிக்க வாய்ப்புள்ளது என்றும் மனுதாரா் வாதிட்டாா். இந்த மனுவின் நகலை அட்டா்னி ஜெனரலுக்கு வழங்கி, அவரது கருத்தைப் பெற மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க