ரகளையில் ஈடுபட்ட மூவா் கைது
கடலூா் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம் மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மாா்ச் 25-ஆம் தேதி மூன்று இளைஞா்கள் மதுபோதையில் லாரியை மறித்து, தகராறில் ஈடுபட்டனராம்.

இதுதொடா்பாக, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து பி.என்.பாளையம் எஸ்.எஸ்.நகா் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயராமன் மகன் தானு (எ) சுகன்வேல் (23), இதே பகுதி சைடு வாய்க்கால் தெருவைச் சோ்ந்த கபிலன் மகன் ரங்கீஸ்வரன் (23) ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனா்.