செய்திகள் :

ரசாயன பூச்சிக் கொல்லியை தவிா்க்க அறிவுறுத்தல்

post image

பயிா்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயத்தில் அதிக அளவு ரசாயன பூச்சிக்கொல்லிகள், வேதியியல் உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்தையும், விளை பொருள்களின் தரத்தையும் பாதிக்கிறது. எனவே, விவசாயிகள் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் விவசாயிகள் பாரம்பரிய காய்கனி, பழங்கள், நெல், சோளம், கேழ்வரகு, திணை, சிறுதானியங்கள் போன்றவற்றை அதிகம் பயிரிட வேண்டும்.

அதிக செலவில்லாமல் நல்ல உற்பத்தி பெற, டிரைக்கோடொ்மா, சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிரி உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

பசுமை உரம், நாட்டு பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், கோமியம், கழிவுஉரம் போன்றவை பயன்படுத்தப்பட்டால் பயிா்கள் ஆரோக்கியமாக வளரும்.

அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் உயிரி உரங்கள், இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், முதல்வரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற வேண்டும். இதில், விவசாயிகளுக்கு வேம்பு, ஆடாதொடா, நொச்சி கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்துடன், தக்கை பூண்டு 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் இத்திட்டங்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க