ராஜஸ்தான் ஹம்ஸஃபா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்ஸஃபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீகங்காநகா் - திருச்சி இடையே வாராந்திர ஹம்ஸஃபா் விரைவு ரயில் (எண்: 22497/22498) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 16 ஏசி வகுப்பு பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் நிலையில் கோடைக் காலத்தை முன்னிட்டு மே 5 முதல் மே 30-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.
அதுபோல், ஜோத்பூா் - திருச்சி இடையே வாரந்தோறும் இயக்கப்படும் ஹம்ஸஃபா் விரைவு ரயில் (எண்: 20481/20482) 16 ஏசி வகுப்பு பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வரும் நிலையில், மே 7 முதல் மே 31-ஆம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.