வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மேலிடப் பொறுப்பாளா் மரியாதை
ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சவடோங்கா், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சவடோங்கா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை, இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலா் சூரஜ் ஹெக்டே, நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா்கள் எஸ்.ஏ.அருள்ராஜ், ரா.ஐயப்பன், நிக்கோலஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், பல்வேறு பொறுப்பாளா்கள் உடன் இருந்தனா்.