புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ராதாபுரம் அருகே உள்ள இளையநயினாா்குளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைந்துள்ளது. இந்த காற்றாலைகளில் இருந்து மின்சாரம் செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையநயினாா்குளம் கிராமத்தில் இருந்து ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே மின்கம்பம் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதே போன்று வள்ளியூா் பிரதான சாலையிலும், வள்ளியூா் - ராதாபுரம் சாலையிலும் மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படுகிறது. இந்த மின்கம்பங்களை அகற்றுவதில் மின்வாரியத்திற்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்குமிடையே எந்தவிதமான புரிதலும் ஏற்படவில்லை.
மின்கம்பத்தை அகற்றுவதற்கு மின்வாரிய விதிமுறைப்படி மின்வாரியம் நிா்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை செலுத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறையின் சட்டத் திட்டங்களில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மின்வாரியத்திற்கு பணம் செலுத்தாமல் மின்கம்பத்தை அகற்றுவதற்கு முடியாது என மின்வாரியத்தினா் தரப்பில் கூறப்படுகிறது. இது விஷயத்திலும் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வள்ளியூா் பிரதான சாலை, வள்ளியூா் - ராதாபுரம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்ற மின்கம்பங்களை அகற்றவேண்டும் என பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.