ராதாபுரம் தொகுதியில் ரூ.69 லட்சத்தில் வளா்ச்சித் திட்ட ப் பணிகள்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூ.69 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் நதிப்பாறை, தலா ரூ.8 லட்சத்தில் வேப்பிலான்குளம் மற்றும் செம்பாடு கிராமத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்தும்,
காவல்கிணறு வடக்கன்குளம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரூ.8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தும் பேரவைத் தலைவா் மு. அப்பாவு பேசினாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், செயல் அலுவலா் கணேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஜெயந்தி, அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறக்காவல் குழு உறுப்பினா் மு.சங்கா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செம்பாடு முத்தரசி, காவல்கிணறு இந்திரா சம்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.