பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னௌ த்ரில் வெற்றி!
ரூ.1.27 கோடிக்கு ஏலம் போன குடியாத்தம் தினசரி மாா்க்கெட் குத்தகை
குடியாத்தம் தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தை ரூ.1.27 கோடி ஏலம் போனது.
குடியாத்தம் நகராட்சி சாா்பில், தினசரி காய்கறி சந்தை, அரிசி கடைகள், இறைச்சிக் கடைகள், ஆடுவதை சாலை, புதிய, பழைய பேருந்து நிலைய கழிப்பறைகள், பேருந்துதாரா்களிடம் கட்டணம் தண்டல் செய்யும் உரிமத்துக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதற்கான ஏலம் நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் மேற்பாா்வையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தையொட்டி பலத்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இதில் தரணம்பேட்டையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை ரூ.1.27- கோடிக்கு ஏலம் போனது. 5- போ் ஏலம் கோரிய நிலையில் எஸ்.ஏ.அா்ஷத் ரூ.1.27- கோடிக்கு ஏலம் எடுத்தாா்.
அரிசி கடைகள் ரூ.5.25- லட்சம், இறைச்சிக் கடைகள் ரூ.2.50- லட்சம், பேருந்து நிலைய சுங்க கட்டணம் ரூ.15- லட்சம், ஆடுவதை சாலை ரூ.6.12- லட்சம், புதிய பேருந்து நிலைய கழிப்பிடம்ரூ.11.26- லட்சம், பழைய பேருந்து நிலைய கழிப்பிடம் ரூ.5.75- லட்சம் ஏலம் போனது.
குத்தகை ஏலம் மூலம் குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.1.72- கோடி வருவாய் கிடைக்கும். இது கடந்த ஆண்டு ஏலத் தொகையை விட 60 சதவீதம் கூடுதலாகும்.