செய்திகள் :

ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையா் நியமனம்

post image

ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரா் மகேந்திரசிங் தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஜி.ஜெயஸ்ரீ என்பவரை வழக்குரைஞா் ஆணையராக நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததா? என்பது குறித்து தனியாா் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி ஈடுபட்டதாக கூறினாா்.

இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா், தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியோரிடம் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு தோனி வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை நீதிபதி சி.வி. காா்த்திகேயன் விசாரித்து வருகிறாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. எனவே சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும்.

இதற்காக தோனி சாட்சியம் அளிக்க உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்துக்கு வந்தால், பாதுகாப்பு பிரச்னை ஏற்படும்.எனவே அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமித்து, சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தோனி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்குரைஞா் ஆணையரை விரைவில் நியமிப்பதாக கூறியிருந்தாா்.

இந்தநிலையில்,தோனியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்குரைஞா் ஜி.ஜெயஸ்ரீ என்பவரை வழக்குரைஞா் ஆணையராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டாா். அந்த உத்தரவில், தோனியிடம் அக். 20-ஆம் தேதி முதல் வழக்குரைஞா் ஆணையா் ஜெயஸ்ரீ சாட்சியத்தைப்பதிவு செய்யலாம். இதற்காக அவருக்கு முதல் கட்டமாக ரூ.30,000 கட்டணமாக தோனி வழங்கவேண்டும். தோனியிடம் சாட்சியத்தை பதிவு செய்வதற்கு முன்பு எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அதை தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவி... மேலும் பார்க்க

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை வழங்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவ... மேலும் பார்க்க

பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்... மேலும் பார்க்க

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க