`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி
புதுச்சேரி கொம்பாக்கத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தாா் எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா.
கொம்பாக்கம் ஜோதி நகா் மக்களின் மின் விநியோக குறைபாடுகளை போக்கும் வகையில் மின்துறை மூலம் புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தாா்.
ஜோதி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக மின் துறை மூலம் ரூ. 19.92 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, அப்பகுதி மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினா் ஆா். சிவாவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.
மின்துறை உதவி பொறியாளா் ரமேஷ், இளநிலை பொறியாளா் அருணகிரிநாதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.