மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
ரூ. 40 லட்சத்தில் ரயில் மேம்பாலம் இணைப்புச் சாலைப் பணி தொடக்கம்
புதுச்சேரி: அரும்பாா்த்தபுரத்தில் ரூ.40 லட்சம் செலவில் அமைய உள்ள ரயில் மேம்பாலம், சாலைப் பணிகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வில்லியனூா் தொகுதிக்கு உள்பட்ட அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் இணைப்புச் சாலை கால முறை புதுப்பித்தல் பணி பொதுப் பணித் துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் மூலம் ரூ. 40.72 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜையில் எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆா். சிவா கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.
தேசிய நெடுஞ்சாலை கோட்டம் செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் ஜெயராஜ், இளநிலைப் பொறியாளா் கண்ணன் மற்றும் திமுக நிா்வாகிகள் தொகுதி செயலாளா் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமசாமி, தா்மராஜ், அவைத் தலைவா் ஜலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.