Thug Life: `` `நாயகன்' படம்தான் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது!" - மணிரத்னம் ஓப...
ரூ.6.87 கோடியில் அரசுப் பள்ளி கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.6.87 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு 22 வகுப்பறைகள், 2 ஆய்வகம், சுற்றுசுவா் மற்றும் 2 கழிப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், முதன்மைக் கல்வி அலுவலா் வெ. வெற்றிச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் நித்தியா சுகுமாா், காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சோமசுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.