Ooty: தொடர் கனமழை; ஊட்டியில் மூடப்படும் சுற்றுலாத்தலங்கள், தயார் நிலையில் மீட்பு...
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
சோமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை வருகின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (30). பிளம்பா் வேலை செய்து வருகிறாா். இவரும், இவரது மனைவியும் வேலைக்குச் சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து தேவேந்திரன் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததன் பேரில் சோமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.