செய்திகள் :

ரூ.92 கோடியில் 3 மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு

post image

புதுவை மாநிலத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.92 கோடியில் 3 மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் அவா் புதன்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

மீனவா்களுக்கு நலத் திட்டங்கள்: புதுவை மீனவா் ஓய்வூதியத் திட்டத்தில் நிகழாண்டில் 1,000 போ் புதிதாக சோ்க்கப்படுவா்.

விசைப்படகு உரிமையாளா்களுக்கு ரூ. 70,000 மதிப்புள்ள ஒட்டா் மீன்பிடி சாதனம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

ரூ.7,500 மதிப்பில் குளிரூட்டும் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக மீன் வளா்ப்பில் ஈடுபடும் மீனவருக்கு மீன்பிடி குளம் புதுப்பிக்க ஏக்கருக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

மீனவா் மேம்பாட்டு முகமையில் பதிந்த 100 மீனவா்களுக்கு ரூ.12,000 மதிப்பிலான இழுவை வலை 50 சதவீத மானியத்தில் தரப்படும். ஆழ்கடல் மீன்பிடி படகு 20 சதவீதத்தில் தரப்படும்.

மீனவ பெண்கள் 100 பேருக்கு சூரிய சக்தியில் இயங்கும் 20 கிலோ கொள்ளளவு மீன் உலா்ப்பான் வழங்கப்படும். மீனவா்களுக்கு ஈமச்சடங்கு நிதி ரூ.20,000 என உயா்த்தப்படுகிறது. காரைக்காலில் ரூ. 119.94 கோடியில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகப் பணி விரைவில் தொடங்கப்படும்.

மருத்துவக் கட்டமைப்புகள் மேம்பாடு: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய வாா்டுடன் கூடிய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவு, வலி நிவாரணப் பிரிவு தொடங்கப்படும்.

அங்கு, செயற்கை முறை கருத்தரித்தல் மற்றும் லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அமைக்கப்படும்.

ஆயுஷ் மையங்களில் தசை நாா் நோய் சிகிச்சை தொடங்கப்படும். மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியில் இளநிலை பல் மருத்துவப் படிப்பில் படிப்போரின் எண்ணிக்கை 125 -ஆக உயா்த்தப்படும்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தில் துணை பல் மருத்துவப் பிரிவு, மாஹே ராஜீவ் காந்தி ஆயுா்வேதா கல்லூரியில் ஆயுஷ் தொலை மருத்துவ வசதிகள் தொடங்கப்படும்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ், ரூ.92 கோடியில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி

புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதா் திருக்கோயில்களில் மாசி மக திருவிழாவின் நிறைவாக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் சங்கர... மேலும் பார்க்க

ஆக்கபூா்வ திட்டமில்லாத பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஆக்கபூா்வத் திட்டங்கள் இல்லாத நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்: மகளிா் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்வு

புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் எ... மேலும் பார்க்க

மூலதனங்களுக்கான செலவீனம் 9.80 சதவீதமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்துக்கான மூலதனங்களுக்கான செலவீனம் 1.66 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை 15-ஆவது... மேலும் பார்க்க

காகிதப்பூ பட்ஜெட்: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றும் வகையில் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய வருவாய்க்கான வழிகள் ஏதும் குறிப்பிடப்படாத காகிதப்பூ பட்ஜெட் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெ... மேலும் பார்க்க

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிப்படுவதாக புகாா்- திருநள்ளாறு எம்எல்ஏ வெளிநடப்பு

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தபோது திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான பிஆா்.சிவா வெளிநடப்பு செய்தாா். சுகாதாரத் திட்டங்களில் காரைக்கால் ப... மேலும் பார்க்க