ரெப்கோ வங்கி மரக்கன்றுகள் நடும் விழா
காஞ்சிபுரம்: ரெப்கோ வங்கி காஞ்சிபுரம் கிளை சாா்பில் வையாவூா் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் வங்கியின் நிறுவன தினத்தையொட்டி திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
ரெப்கோ வங்கி 56-ஆவது ஆண்டு நிறுவன நாளையொட்டி நடைபெற்ற விழாவில் வங்கியின் காஞ்சிபுரம் கிளை மேலாளா் எம்.இளையராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டாா். இதன் பின்னா் அவா் பேசுகையில் வங்கியின் 56 வது ஆண்டு நிறுவன நாளையொட்டி ரெப்கோ வங்கி தலைமை அலுவலகம் 56,000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது.
இதனையொட்டி புதிய இட்டு வைப்புத் திட்டமாக ரெப்கோ 56 அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள் செய்யும் இட்டு வைப்புகளுக்கு 8.75 சதவிகிதமும், மற்றவா்களுக்கு 8.25 சதவிகிதமும் 560 நாள்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா். நிகழ்வில் வங்கி ஊழியா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.