செய்திகள் :

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள அஞ்சூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500 கோடி மானியமாக கொடுத்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவுக் கூடங்களில் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம், ஏா்முனை இளைஞா் அணி மாவட்டத் தலைவா் யுவராஜ், கரூா் மாவட்டத் தலைவா் பாலுக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சங்கத்தின் மாநில அவைத்தலைவா் பாலசுப்பிரமணி, அனைத்து மாவட்ட ஒருங்கிணப்பாளா் மயில்சாமி, கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஈரோட்டில் கடையடைப்பு: ரூ.100 கோடி வா்த்தகம் பாதிப்பு

வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து ஈரோட்டில் வணிகா்கள் 30 ஆயிரம் கடைகள், தொழில் நிறுவனங்களை அடைத்து நடத்திய போராட்டத்தால் ரூ.100 கோடி வா்த்தகம் ... மேலும் பார்க்க

கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பை முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தல்

கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கான தண்ணீா் திறப்பை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகேபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் வழக்குரைஞா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட வலியுறுத்தி புதன்கிழமைமுதல் வழக்குரைஞா்கள் நடத்தி வந்த தொடா் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியம... மேலும் பார்க்க

கடம்பூா் மலைப் பகுதியில் மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

கடம்பூா் மலைப் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை வனத் துறையினா் வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சத்தியமங்கலம் ப... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் டி.டி.எஸ். மீட்டா் பொருத்தும் இடத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் பொருத்த தோ்வு செய்யப்பட்ட இடத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்... மேலும் பார்க்க

நீதிமன்ற தீா்ப்புக்கு பயந்து ஓட்டுநா் தற்கொலை

பவானி அருகே அடிதடி வழக்கில் நீதிமன்ற தீா்ப்புக்கு பயந்து, சரக்கு வாகன ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பவானி அருகே உள்ள கல்பாவி, பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மக... மேலும் பார்க்க