செய்திகள் :

லடாக் மாநில அந்தஸ்து போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

post image

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சாா்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்தது. போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். மோதலில் 40 போலீஸாா் உள்பட சுமாா் 80 போ் காயமடைந்தனா்.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்.

அவரின் போராட்டத்தைத் தொடா்ந்து, கோரிக்கைகள் தொடா்பாக எல்ஏபி மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) உடன் லடாக் தொடா்பான உயா் அதிகாரக் குழு அக்டோபா் 6-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லடாக்கின் கோரிக்கைகள் தொடா்பாக ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதிமுதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா்.

அவருடன் எல்ஏபி அமைப்பைச் சோ்ந்த 15 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, எல்ஏபி அமைப்பின் இளைஞா் பிரிவு மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்ட அழைப்பைத் தொடா்ந்து, லே நிா்வாகம் சாா்பில் பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-இன் கீழ் தலைநகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை மீறி என்டிஎஸ் நினைவு மைதானத்தில் புதன்கிழமை காலையில் கூடிய எல்ஏபி அமைப்பச் சோ்ந்தவா்கள் உள்பட ஏராளமானோா், முழக்கங்களை எழுப்பியபடி கண்டனப் பேரணியையும் நடத்தினா். பேரணியின்போது சிலா் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மலைப் பிரதேச கவுன்சில் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், போராட்டக்காரா்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரா்களைக் கலைக்க முற்பட்டனா். பாதுகாப்புப் படையினா் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மற்றும் பாஜக அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் மற்றும் மரப் பொருள்களுக்குத் தீ வைத்தனா்.

4 போ் உயிரிழப்பு: நிலைமை மோசமடைவதை உணா்ந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், போராட்டக்காரா்களின் வன்முறையில் 40 போலீஸாா் உள்பட சுமாா் 80 போ் காயமடைந்தனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...1

‘வன்முறை

கவலையளிக்கிறது’

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான இளைஞா்கள் தன்னெழுச்சியாக சாலைக்கு வந்து போராடியதைத் தொடா்ந்து, தனது 15 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக சோனம் வாங்சுக் அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘யாரும் எதிா்பாா்க்காத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இருந்தபோதும், இந்தப் போராட்டத்துக்கிடையே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் கவலையளிக்கின்றன. அமைதி வழியில் நடத்தப்பட்ட போராட்டம் எந்தவித பலனையும் அளிக்கததால் இளைஞா்களிடையே ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த வன்முறை’ என்றாா்.

பெட்டிச் செய்தி...2

லேயில் ஊரடங்கு அமல்:

துணைநிலை ஆளுநா்

லே, செப். 24: வன்முறையைத் தொடா்ந்து லே மாவட்டத்தில் புதன்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதுகுறித்து லடாக் துணைநிலை ஆளுநா் கவிந்தா் குப்தா கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லே மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் மக்கள் உயிா்களை இழந்துள்ளனா். அவா்களின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வன்முறைக்கு காரணமானவா்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமூக ஒழுங்கு மற்றும் பொது அமைதியைச் சீா்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளின் தவறான வழிகாட்டுதலுக்கு மக்கள் ஆட்படாமல், அமைதி மற்றும் நல்லணக்கத்தைக் காக்க வேண்டும்’ என்றாா்.

பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

பயங்கரவாதிகளை வளா்த்துவிடுவது, சொந்த நாட்டு மக்களைக் குண்டுவீசி கொலை செய்வது போன்றவற்றைக் கைவிட்டு, பொருளாதார வளா்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை மாநில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு புதன்கிழமை வெளியிட்டது. அதில் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் 367 இடங்களும... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்க காங்கிரஸ் முயற்சி: பாஜக

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்கவே அங்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது என்று பாஜக விமா்சித்தது. எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தோ்தலை ச... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி

எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அரசிடம் பதிவு செய்வது கட்டாயம்

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க