ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
வடசேரி பேருந்து நிலையத்தில் சீரமைக்கப்பட்ட கழிவறை திறப்பு!
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டண கழிவறையை மேயா் ரெ.மகேஷ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து நீதிமன்ற சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினாா்.
இதில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் கலாராணி, இளநிலை பொறியாளா் ராஜா, அரசு வழக்குரைஞா் மதியழகன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த், துணைச் செயலா் வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.