'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
வண்டறந்தாங்கலில் ரூ. 77.89 லட்சத்தில் கிராம அறிவுசாா் மையம்! - அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா்
வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ. 77.89 லட்சத்தில் கிராம அறிவுசாா் மையம் அமைக்க கட்டுமானப் பணிக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ. 77.89 லட்சம் மதிப்பில் கிராம அறிவுசாா் மையம் அமைக்கப்பட உள்ளது. 203.90 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்படும் இந்த அறிவுசாா் மையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 15 கிராமங்களைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை அமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துப் பேசியது:
தாட்கோ மூலம் இந்தப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் 4 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் விரைவில் திறக்கப்படும்.
இதன் மூலம் வண்டறந்தாங்கலை சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற முடியும். இந்த மையம் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் சமுதாயக் கூடமாகவும் பயன்படுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், வண்டறந்தாங்கல் ஊராட்சித் தலைவா் ராகேஷ், தாட்கோ செயற்பொறியாளா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், வண்ட்றந்தாங்கல் ஊராட்சித் தலைவா் ராகேஷ், தாட்கோ செயற்பொறியாளா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.