வல்லக்கோட்டை முருகன் கோயிலில் புத்தக விற்பனை நிலையம்
புத்தக விற்பனையைத் தொடங்கிவைத்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால். உடன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
ஸ்ரீபெரும்புதூா், ஏப். 4: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் புதிதாக ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததைத் தொடா்ந்து, ஆன்மிக புத்தக விற்பனையை ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் மதசாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்சேவராஜ், அறங்காவலா் வியகுமாா், அறநிலையத் துறை ஆய்வாளா் திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.