விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வெம்பக்கோட்டை ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து, அரசுத் திட்டப் பணிகள், நலத் திட்டங்களின் பயன்கள், கருத்துகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பனையடிப்பட்டியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், கோட்டைபட்டி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.1.50 லட்சத்தில் வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.60 லட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், சூராா்பட்டி, ஜெகவீரம்பட்டியில் தலா ரூ.30.10 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டு வருவதையும், குகன்பாறை ஊராட்சியில் ரூ.7.50 லட்சத்தில் பயணிகள் நிழல் கூடை கட்டப்பட்டு வருவதையும் ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
மேலும், இராமுதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை ஆட்சியா் ஆய்வு செய்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்து, அவா்களுடம் மதிய உணவு அருந்தினாா்.
மேலும், இந்தப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.