வள்ளுவர் சிலையைக் காண 3 புதிய படகுகள்: மு.க. ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலையைக் காண்பதற்காக 3 சுற்றுலா படகுகள் வாங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளி விழா மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் காணம் வகையில் 3 சுற்றுலா படகுகள் வாங்கப்படும். ஒரு சிலை அமைத்ததற்கு வெளி விழாவா? என அதிமேதாவிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதிவைக்க ஊக்குவிக்கப்படும்.