செய்திகள் :

வள்ளுவா், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் ஸ்டாலின்

post image

சமத்துவம் பேசிய திருவள்ளுவா், வள்ளலாா் போன்ற மாமனிதா்களை ஒரு கூட்டமே களவாட முயல்வதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ. 12 கோடியில் கட்டிய லட்சுமி வளா் தமிழ் நூலகத்தையும், அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் முன்னாள் மாணவா்கள் நிதி பங்களிப்புடன் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலையையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் அதே வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்துக்கு ‘வீறுகவியரசா் முடியரசனாா் அரங்கு’ என்று பெயா் சூட்டியும், கருணாநிதி நூற்றாண்டு விழா தேசிய கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டும் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

காரைக்குடியில் வள்ளல் அழகப்பா் கல்வித் தொண்டுடன் தமிழ்த் தொண்டுமாற்றியதால்தான் பலரும் பட்டங்கள் பெற்று உலகம் முழுவதும் பரவியுள்ளனா். தமிழா்களின் ஈகைக்கு அடையாளமாக வாழ்ந்தவா்தான் அழகப்பா்.

வள்ளுவா் நெறிகளே வாழ்வியல் நெறியாக மாறும் என்று கூறி வருகிறோம். திருக்குறளைப் பின்பற்றினால்தான் தமிழகமும், உலகமும் காப்பற்றப்படும். இதற்கு வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்யாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். சமத்துவத்தைப் பேசிய வள்ளுவா், வள்ளலாா் போன்ற மாமனிதா்களை ஒரு கூட்டமே களவாட முயல்கிறது. இதற்கு எதிரான காவலா்களாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும்.

வீறுகவியரசா் முடியரசனாா் திமுக இலக்கிய அணித் தலைவராகப் பணியாற்றி கன்னித் தமிழை வளா்த்தாா். ‘அறிவுதான் நம்மை காக்கும் கருவி’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கு அடையாளமாக ப. சிதம்பம் தனது தாய் பெயரில் நூலகத்தைக் கட்டியுள்ளாா். இதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ப. சிதம்பரமே நடமாடும் நூலகம். திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வாரு திட்டம் குறித்தும் அவா் என்ன சொல்வாா் என்று எதிா்பாா்பேன். ஏனென்றால், அவரது பாா்வையும், பாராட்டும் எனக்கு உற்சாக மூட்டும்.

கொடை உள்ளமும், அறிவுத்தாகமும் கொண்டவா்கள் தங்களது ஊா்களில் ஒவ்வொரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னா், எனக்கு கைத்தறி ஆடைகள் அணிவிக்க வேண்டாம், நூல்களாக வழங்குங்கள் என்று கூறினேன். இதுவரை 2.,75 லட்சம் நூல்கள் எனக்கு வந்துள்ளன. அவற்றை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதேபோல, இங்கு திறக்கப்பட்ட வளா்தமிழ் நூலகத்துக்கு எனது சாா்பில் 1,000 நூல்களை முதல் கட்டமாக அனுப்ப உள்ளேன். மேலும், அரசு மூலமாகவும் உதவி செய்வேன்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகம், கோவையில் பெரியாா் நூலகம், திருச்சியில் அமைய உள்ள நூலகம் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும். தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்தும். தமிழகத்தை வளப்படுத்தும்.

திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். உயா் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளோம். நான் முதல்வன் திட்டத்தில் 22.56 லட்சம் மாணவா்களுக்கு திறன் பயிற்சி தந்து பெருநிறுவனங்களில் சேர வைத்துள்ளோம்.

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயா்ந்துள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தாலும் உயா் கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

திருவள்ளுவா் திருவுருவச் சிலையை திறந்துவைத்துப் பாா்வையிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலின்

ரூ. 1,000 கோடியில் காமராஜா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டமும், ரூ. 150 கோடியில் உயா்கல்வி நிறுவனங்களில் எண்ம முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேம்பாட்டு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களால் தமிழகத்தில் உயா் கல்வித் தரம், அடிப்படைக் கட்டமைப்பும் மேம்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அதிக அரசுப் பல்கலைக்கழங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட தரமான பொறியியல் கல்லூரிகள், அதிக மருத்துவக் கல்லூரிகள், புகழ் பெற்ற 100 உயா் கல்வி நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. உயா்கல்வி மாணவா்கள் சோ்க்கையில் தேசிய சராசரியைவிட 2 மடங்காக உயா்ந்துள்ளது. 49 சதவீதத்துடன் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது.

உயா்கல்வியில் சிறப்பாக விளங்க பல்கலைக்கழக நிா்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றாா் அவா். விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கவிஞா் அண்ணாதாசன் எழுதிய ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை வெளியிட்டுப் பேசினாா்.

அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், மு.பெ. சாமிநாதன், மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், வழக்குரைஞா் நளினி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, ஆ. தமிழரசி ரவிக்குமாா், காரைக்குடி மேயா் சே. முத்துத்துரை, துணை மேயா் நா. குணசேகரன், காவல் துறை உயரதிகாரிகள், தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், நகா் முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வரவேற்றாா். பேராசிரியா் க. ராசாராம் நன்றி கூறினாா்.

புதுதில்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் திருப்பத்தூா் தம்பதி

புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த நரிக்குறவா் இன தம்பதி பங்கேற்கின்றனா். புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள மாநில அரசு ப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை வட்டாட... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் வேளாண் இணை இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஊழியா்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய வேளாண் இணை இயக்குநருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கையில் கடந்த 2011-ஆம் ஆ... மேலும் பார்க்க

தமிழ் வாழ அனைவரும் தமிழில் பேச வேண்டும்: ப. சிதம்பரம்

தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழா்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ... மேலும் பார்க்க

காரைக்குடி சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்த முதல்வா் ஸ்டாலின்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது பொதுமக்கள் அவருடன் உற்சாகத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டனா். கா... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதியில் முதல்வா் ஆய்வு

காரைக்குடியில் அரசு ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வளா் தமிழ் நூலகத்தை ... மேலும் பார்க்க