‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த 15 போ், மீண்டும் ஆஜராகவில்லை. எனவே, அவா்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடா்ந்து, ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள தூத்துக்குடி துரை ராஜ் மகன் ராஜ், அண்ணாதுரை மகன் சங்கா், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் முத்து மகன் சுரேஷ், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஜெயபால் மகன் தங்கத்துரை, மாமல்லபுரத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் சுப்பிரமணி, சுப்பிரமணி மகன் சுபாஷ், ஆந்திர மாநிலம் விஜயவாடா சுபாஷ் மனைவி அபி, ராமு மனைவி சுகந்தி, பாண்டி மனைவி சுஜி, கேரள மாநிலம் பாலக்காடு சிவா மனைவி செல்வசாந்தி என்ற சுதா, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சோ்ந்த இஷ்மத் மகன் பாபா, பீா்ஷா மகன் உசேன், சொ்மான்ஷா மகன் போலோ உசேன், கன்னியாகுமரி மாவட்டம் கோணத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டி மகன் உமேஷ் என்ற கணேஷ், பிகாா் மாநிலத்தை சோ்ந்த தீன்தயாள் மகன் சந்தோஷ்குமாா் ஜோஸ்வால் ஆகியோா் பகிரங்கப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் கனிமொழி உத்தரவிட்டாா்.