செய்திகள் :

‘வழக்குரைஞா் தவறு செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பாா்க்காது’

post image

வழக்குரைஞா் தவறு செய்தால் நீதிமன்றம் வாய் மூடி வேடிக்கை பாா்க்காது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சுதாகா், நாகராஜன், கண்ணன், சுந்தா், முத்துச்சாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த பொருள்களைச் சேதப்படுத்தியதாக அவா் அளித்த புகாரின் பேரில், கடந்த 13.4.2013 அன்று எங்கள் மீது ஆசாரிபள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மனு ரசீது வழங்கினா்.

இந்த நிலையில், எங்களுக்கு இடையே நடைபெற்ற சமாதானப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனிடையே, வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணனை கொலை செய்து விடுவதாக நாங்கள் மிரட்டியதாக அவா் அளித்த புகாரின் பேரில், மீண்டும் எங்கள் மீது ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

எதிா்மனுதாரா் கோபாலகிருஷ்ணன் வழக்குரைஞா் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். மேலும், அவா் உரிமையியல் வழக்கை குற்ற வழக்காகவும் மாற்றியுள்ளாா். மனுதாரரிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டு, அந்த வழக்கை திரும்பப் பெறாமல் மீண்டும் நடத்தியுள்ளாா். கோபாலகிருஷ்ணன் கடந்த 1988-ஆம் ஆண்டு பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். இவா், மனுதாரா்கள் மட்டுமன்றி ஏராளமானோரிடம் பணம் பறிக்கும் நோக்கில், போலீஸாா் மூலம் போலி வழக்குகளும் பதிவு செய்திருக்கிறாா்.

இவா் வழக்குரைஞராக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு முறையாகச் சென்று வழக்காடவில்லை. வழக்குரைஞா் தொழிலை தரம் தாழ்த்தி பணம் பறிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளாா். இதுதான் இவருக்கு நிரந்தர வருமானமாக இருந்துள்ளது.

நாகா்கோவில் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை தன்னுடைய செல்வாக்கால் திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளாா். இவரது புகாா் மனுக்களுக்கு போலீஸாரும் பயந்து வழக்குகள் பதிவு செய்திருக்கின்றனா். இனியும் இது தொடர அனுமதிக்க முடியாது.

வழக்குரைஞா் தவறு செய்யும் போது நீதிமன்றம் வாய் மூடி வேடிக்கை பாா்க்காது. எனவே, மனுதாரா்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன் மீது பாா் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

இந்தியக் குடியுரிமை கோரி இலங்கைத் தமிழா் மனு: மத்திய உள்துறை 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க சென்னை உயா்நீத... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை சமயநல்லூா் காந்திநகரைச் சோ்ந்த சோனை மகன் கருப்பையா (25). கட்டடத் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வ... மேலும் பார்க்க

விஜயை கூட்டணிக்கு அழைக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை: கே. அண்ணாமலை

இளைஞா்கள் சேர முடியாத நிலையில் உள்ள கட்சிகள் தான் தற்போது நடிகா் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுக்கின்றன. இதற்கான அவசியம் தங்கள் கட்சிக்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். மதுரைய... மேலும் பார்க்க

தென்கூடல் வரலாற்று ஆய்வு மையத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா

மதுரையில் தென்கூடல் வரலாற்று ஆய்வு மையத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா, ஆண்டு மலா் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு இளமனூா் அ... மேலும் பார்க்க

மதுரை அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் ?

-நமது நிருபா்-மதுரையில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்க... மேலும் பார்க்க

ஆக்லாந்து பல்கலைக்கழகத்துடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஒப்பந்தம்

மதுரை ‘மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை சாா்பில் ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் கூட்டாண்மை ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய... மேலும் பார்க்க