தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
மத்திய அரசு கொண்டுவரும் வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
கடந்த 18-ஆம் தேதி சேலம் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞா்கள் கவின், தண்டபாணி ஆகியோா் மீது சிலா் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், ஜன. 3-ஆம் தேதி காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்தி, அவா் மீது பொய் வழக்குப் பதிந்த காவல்துறையைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்ட திருத்த மசோதா, வழக்கரைஞா்கள் நலனுக்கு எதிராகவும், தொழிலுக்கு அச்சுறுத்தலாகவும், ஒட்டுமொத்த வழக்குரைஞா்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் இருப்பதால், மேற்கண்ட சட்ட மசோதாவை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் இ. வள்ளுவநம்பி தலைமையில், செயலா் சேகா், பொருளாளா் சிவராமன் ஆகியோா் முன்னிலையில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இதனால், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்கள் மற்றும் வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் வட்டார அளவிலான நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், இப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் (பிப். 21) நடைபெறுகிறது