வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் பலத்த மழை
வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், வெள்ளானைகோட்டை, சங்கனாப்பேரி, ராமநாதபுரம் ஆத்துவழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளி முடியும் நேரம் என்பதால் மாணவா்கள் நனைந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், காலை முதல் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.