``அண்ணாமலைக்கு எங்களின் பலம் நன்றாகத் தெரியும்'' - சென்னையில் கர்நாடகா துணை முதல...
மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா். என். சிங்கிடம்
அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கி வந்த நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மீட்டா் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கி வந்த நெல்லை - கொல்லம் மூன்று ஜோடி பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றை தினசரி இயக்க வேண்டும்.
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை - மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை - நெல்லை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும். தென்காசி - நெல்லை வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும். தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா உடனிருந்தாா்.