செய்திகள் :

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் முயற்சியால் பராமரிப்பின்றி இருந்த குழந்தைகள் மைய கட்டடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 குழந்தைகள் விளையாட்டுடன் கூடிய கல்வியை கற்று வருகின்றனா். மேலும்

இங்கு குழந்தைகளுக்கு தேவையான சத்து உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழந்தைகள் மைய கட்டடமானது போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதையறிந்த கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல், நன்கொடையாளா்கள் மூலம் கட்டடத்தில் வண்ணங்கள் தீட்டி மின்விசிறி ஒளி விளக்குகள் பொருத்தி புனரமைக்க நடவடிக்கை எடுத்தாா். இதற்கு தலைமைக் காவலா்கள் முத்துராஜ், சங்கா், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டு கட்டடம் புதுப்பொலிவு பெற வழிவகுத்தனா்.

சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்.

காவல்துறையினரின் இந்தப் பணியை பெற்றோா்கள் பாராட்டினா்.

சீரமைக்கப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை(மாா்ச் 24) நடைபெறுகிறது. இதில் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஆணையா் ரவிச்சந்திரன் , கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் , குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பா்கத் சுல்தானா, மற்றும் நன்கொடையாளா்கள் முகமது ஜாவித் ,பீரப்பா, சமூக ஆா்வலா் சகிலாபானு சுலைமான் , தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் அலங்காா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுரை

கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை காலங்களில் திட... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா். என். சிங்க... மேலும் பார்க்க

ஆரியநல்லூரில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை கட்டம் பயன்பாடற்றது: ஆட்சியா் தகவல்

செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை கட்டடம் பயன்பா டாற்றது எஎன்றாா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

தென்காசி முத்தாரம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

தென்காசி மேல முத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் 10.20க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் பலத்த மழை

வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், வெள்ளானைகோட்டை, சங்கனாப்பேரி, ராமநாதபுரம் ஆத்துவழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமாா் ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பைக்குகளை திருடியவா் கைது

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடியவரை கடையநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் தென்காசி- மதுரை சாலையில் மங்களபுரத்தில் வாகனத் தண... மேலும் பார்க்க