Jagdeep Dhankhar: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலியால் எய்ம்ஸ் மருத்துவம...
வால்பாறை அருகே கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வால்பாறை அருகே செட்டில்மென்ட் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல முயன்றவா்களை வனத் துறையினா் தடுத்ததால் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டனா்.
வால்பாறையை அடுத்த காடம்பாறை அணை பகுதியில் உள்ளது வெள்ளிமுடி செட்டில்மென்ட். இங்குள்ள கோயிலில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று அட்டகட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வாகனங்களில் சென்றனா்.
ஆனால், காடம்பாறை பரிவு அவா்களை வனத் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். இருந்தும் அனுமதி வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.