விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம், இந்தியா 370 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. இன்னும் ஒரேயொரு நாள் ஆட்டம் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைய வாய்ப்பு அதிகமுள்ளது.