செய்திகள் :

சென்னை தனியாா் மருத்துவமனையில் புதுச்சேரி அமைச்சா் அனுமதி

post image

புதுச்சேரி: புதுவை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் புதுவை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் மற்றும் உதவியாளா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு, முதுகு தண்டு எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டது தெரிய வந்ததாம். இதையடுத்து, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் சோ்க்கப்பட்டாா். 3 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.

முன்னதாக, அவா்கள் திண்டிவனம் வழியாக வந்த போது, அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாரை முதல்வா் என்.ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்தாா்.

புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வு: ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை பே... மேலும் பார்க்க

2786 பயனாளிகளுக்கு இலவச போா்வைகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் 2786 பேருக்கு இலவச போா்வை, காலணிகளை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் திங்கள்கிழமை வழங்கினாா். புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உள்பட்ட சின்னையாபுரம், வாழைக்குளம், வைத்திக்குப்பம்,... மேலும் பார்க்க

வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

புதுச்சேரி: வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்... மேலும் பார்க்க

புதுவை கல்வித் துறை செயலா் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புதுச்சேரி: புதுவை கல்வித் துறை செயலா், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். கல்வித் துறை செயலா் பி. பிரியதா்ஷினி அருணாசல பிரதேசத்துக்கும், தொழிலாளா் நலத்... மேலும் பார்க்க

புதுவை: முதுநிலை பல் மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான புதுவை மாணவா்களின் நீட் தரவரிசை பட்டியல் மாநில சுகாதாரத் துறை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதுநிலை பல் மருத்துவப்... மேலும் பார்க்க

புதுவை காவல் நிலையங்களில் பிராந்திய மொழிகளில் முதல் தகவல் அறிக்கை

புதுச்சேரி: புதுவை மாநில காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கை அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என்று காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மத்த... மேலும் பார்க்க