செய்திகள் :

புதுவை: முதுநிலை பல் மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

post image

புதுச்சேரி: முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான புதுவை மாணவா்களின் நீட் தரவரிசை பட்டியல் மாநில சுகாதாரத் துறை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த மே 15-ஆம் தேதி வெளியானது.

புதுச்சேரியில் இந்தத் தோ்வை 210 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தற்போது வெளியான தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதல் இடத்தை அதுல் பிரகாஷ் பெற்றுள்ளாா். இவா் 960-க்கு 692 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா்.

இரண்டாமிடத்தை இந்துஜாவும் (691 மதிப்பெண்கள்), மூன்றாமிடத்தை முபீனாவும் (675), நான்காம் இடத்தை விஷ்ணு பிரியாவும் (640), ஐந்தாம் இடத்தை தீபிகாவும் (632) பிடித்தனா்.

தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியத்தின் தரவு தளத்தில் இருந்து புதுவை தரவரிசைப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கையின்போது, புதுவையைத் தவிா்த்து வேறு மாநிலத்தில் இரட்டைக் குடியுரிமை கோரவில்லை என்பதற்கான தேவையான ஆவணங்கள், மாணவரின் சுய உறுதிமொழியை சமா்ப்பிப்பதன் மூலம் சோ்க்கை நடைபெறும்.

இந்தப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 5 நாள்களுக்குள் சுகாதாரத் துறை இயக்குநா், நோடல் அதிகாரியிடம் தெரிவிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வு: ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை பே... மேலும் பார்க்க

2786 பயனாளிகளுக்கு இலவச போா்வைகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் 2786 பேருக்கு இலவச போா்வை, காலணிகளை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் திங்கள்கிழமை வழங்கினாா். புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உள்பட்ட சின்னையாபுரம், வாழைக்குளம், வைத்திக்குப்பம்,... மேலும் பார்க்க

வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

புதுச்சேரி: வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்... மேலும் பார்க்க

சென்னை தனியாா் மருத்துவமனையில் புதுச்சேரி அமைச்சா் அனுமதி

புதுச்சேரி: புதுவை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் புதுவை அமைச... மேலும் பார்க்க

புதுவை கல்வித் துறை செயலா் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புதுச்சேரி: புதுவை கல்வித் துறை செயலா், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். கல்வித் துறை செயலா் பி. பிரியதா்ஷினி அருணாசல பிரதேசத்துக்கும், தொழிலாளா் நலத்... மேலும் பார்க்க

புதுவை காவல் நிலையங்களில் பிராந்திய மொழிகளில் முதல் தகவல் அறிக்கை

புதுச்சேரி: புதுவை மாநில காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கை அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என்று காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மத்த... மேலும் பார்க்க