விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்
விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணிக்கும் மகளிா் விடியல் பயணத்திட்டம்”2021-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்கும் மகளிா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மே 31-ஆம் தேதி வரை 139 கோடி மகளிா் பயணம் செய்து பயனடைந்துள்ளனா்.
தொடா்ந்து, விடியல் பயண பேருந்துகளில் பயணிக்கும் மகளிா் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 9.54 லட்சம் மகளிா் இப்பேருந்துகளில் பயணித்த நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் மேலும் 21 சதவீதம் அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.