தொகுதி மறுசீரமைப்புக்காக குரல் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!
விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
கோவை மாநகரில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் 14,438 பேருக்கு ஏற்கெனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுபட்ட வியாபாரிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அடையாள அட்டை கிடைக்கப்பெறாத சாலையோர வியாபாரிகள், தங்கள் பகுதிக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் விவரங்களை வழங்கி அடையாள அட்டைக்கு இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.