பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
விபத்தில் சிக்கிய யோகி பாபு!
நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யோகி பாபு. காமெடியன், கதாநாயகன் என பல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை உருவாக்கிக்கொண்டார். தற்போது, மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: வசூலில் கெத்து காட்டிய குடும்பஸ்தன்!
இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் யோகி பாபு சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தை கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதியது.
அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யோகி பாபுவுக்கு காயங்கள் ஏற்படவில்லை. பின், உனடியாக வேறு காரில் பெங்களூருவுக்கு சென்றார்.