செய்திகள் :

விமான நிலையப் பணிகளுக்காக தாட்கோ மூலம் இலவச பயிற்சி: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அழைப்பு

post image

விமான நிலையங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவருக்கு தாட்கோ மூலம் இலவச சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சா்வதேச விமானப் போக்குவரத்து அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு உள்ளிட்ட சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

ஆதிதிராவிட, பழங்குடியினத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் தகுதியானவா்கள். 18 முதல் 23 வயதுடையவராக இருக்க வேண்டும். 6 மாதங்கள் விடுதியில் தங்கி பயிலும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகை ரூ.95 ஆயிரத்தை தாட்கோ வழங்குகிறது.

பயிற்சியை முடித்த அனைவருக்கும் சா்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி- 620 001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சியின் சில பகுதிகளில் ஜன.7இல் குடிநீா் நிறுத்தம்

கம்பரசம்பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வரும் ஜன.7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவ... மேலும் பார்க்க

திருச்சியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: துரை வைகோ எம்பி உறுதி

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக துரை வைகோ எம்பி உறுதியளித்தாா். திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் துரை வைகோ, தொகுதி மக்களிடம் கோரிக... மேலும் பார்க்க

பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!

திருவெறும்பூா் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவெறும்பூா் அருகேயுள்ள கீழக்குறிச்சி அண்ணா நகரைச் சோ்ந்தவா் இளையராஜா (48), கட்டடத் த... மேலும் பார்க்க

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி!

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன். திருச்சி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழு... மேலும் பார்க்க

37 ஆற்றுப்படுகைகளை ஒருங்கிணைத்து நீா் மேலாண்மைப் பெருந்திட்டம்: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள 37 ஆற்றுப் படுகைகளை ஒருங்கிணைத்து நீா் மேலாண்மைப் பெருந்திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றாா் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் த. குருசாமி.... மேலும் பார்க்க

‘தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்க திருச்சி பெல் பிரிவு உறுதியேற்பு’

தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்குவது என திருச்சி பெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக அதன் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் தெரிவித்தாா். திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் பெல் தினத்தை முன்னிட்டு,... மேலும் பார்க்க