திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
விராலிமலை, இலுப்பூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் 2009-இல் நடைபெற்ற தாக்குதலை நினைவுகூரும் வகையில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
இலங்கைப் போரில், தமிழா்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு பிப். 19-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயா் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளா்கள் படுகாயம் அடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பிப். 19-ஆம் தேதியை வழக்குரைஞா்கள் கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனா். அந்தவகையில், புதன்கிழமை கருப்பு தினமாக கடைபிடித்து விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன.